செவ்வாய், 28 ஏப்ரல், 2009

கருவாயன் கல்யாணம்

கருவாயன் கல்யாணம்
-----------------------------
கண்மாயின் மீன் குஞ்சு
காலிடுக்கைக் கடிக்கும்
கருவமரத் தேன்கூடு
இனிப்போடு கொட்டும்
புளியமரம் பார்த்தாலே
நாக்கு பொத்துப் போகும்
பொங்கலிடும் போதெல்லாம்
புகை மூட்டம் மூடும்
பஞ்சாயத்து ரேடியோ
பகலெல்லாம் பாடும்
பருவத்துக் கிளர்ச்சிகளை
சினிமாவும் கூட்டும்
ஊர்கூடி குலவையிட
நாதசுரம் ஊதும்
உன்மத்த இளவட்டம்
கம்பெடுத்து சுத்தும்
கருவாடும் கறிமீனும்
கார சார மாகும்
கருவாயன் கருவாச்சி
கல்யாணம் கூடும்
-------------------------------நாகேந்திர பாரதி
---------------------------------------------------------------------------------

1 கருத்து:

  1. இனிமையான கவிதை .... ஆனால்
    "பஞ்சாயத்து ரேடியோ
    பகலெல்லாம் பாடும்" - இதைத்தான் இப்போது பார்க்கமுடிவதில்லை ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    பதிலளிநீக்கு