புதன், 29 ஏப்ரல், 2009

காதல் இதயம்

காதல் இதயம்

------------------

அடிக்கடி மூச்சு

வாங்குகிறதா

அலைஅலையாய்

உள்ளே ஓடுகிறதா

மேல்கீழ் ஏறி

இறங்குகிறதா

மேனியில் வேர்வை

ஊறுகிறதா

பஞ்சாய் கண்கள்
அடைக்கிறதா

பயமும் பொங்கி
வருகிறதா

இரத்த வெப்பம்
உணர்கிறதா

ஏதோ மாதிரி

இருக்கிறதா

வயதில் வந்தால்

காதல் நோய்

வயதாகி வந்தால்

இதய நோய்

---------------------------நாகேந்திர பாரதி

--------------------------------------------------------------------------------

1 கருத்து:

  1. நீங்கள் சொல்லும் அத்தனை "சிம்டம்ஸ்"ம் உள்ளது தலைவா .... ஆனால் எனக்கோ இப்போது ரெண்டும் கெட்டான் வயது .... இப்போது என்ன முடிவுக்கு வருவதென்றே தெரியவில்லை... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    பதிலளிநீக்கு